"216 துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும்" - மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி
சென்னையின் அனைத்து பகுதிகளிலும் மின் புதைவிட கம்பி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார் .
சென்னையின் அனைத்து பகுதிகளிலும் மின் புதைவிட கம்பி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார் .சட்டப்பேரவையில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து பேசிய அவர், தமிழகத்தில் 216 துணை மின்நிலையங்கள் அமைக்கப்படும் என்றும், இதில், 193 துணை மின்நிலையங்களுக்கான நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். எஞ்சிய 23 துணை மின் நிலையங்களுக்கான பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். சென்னையில் புதைவட மின் கம்பிகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
Next Story