மதுரை மீனாட்சி அம்மன் கோயில் விபத்து...சேதமடைந்தவற்றை அப்புறப்படுத்த ரூ.30 லட்சம் செலவு
கடந்த 2018 இல், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தீவிபத்து ஏற்பட்டு, வீரவசந்தராயர் மண்டபம் பெருமளவில் சேதம் அடைந்தது. தற்போது, மறு சீரமைப்பு பணிகள் நடைபெறும் நிலையில், கோவை சேர்ந்த நபர் ஒருவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பி விளக்கம் கேட்டிருந்தார்.
கடந்த 2018 இல், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தீவிபத்து ஏற்பட்டு, வீரவசந்தராயர் மண்டபம் பெருமளவில் சேதம் அடைந்தது. தற்போது, மறு சீரமைப்பு பணிகள் நடைபெறும் நிலையில், கோவை சேர்ந்த நபர் ஒருவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பி விளக்கம் கேட்டிருந்தார். அதன்படி, கடைகள் வாடைகை தொடர்பான கேள்விக்கு, சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்னர் கடை வாடகைக்கு விடப்பட்டுள்ளன. அதற்கான எந்த ஆவணங்களும் இல்லாதபோது, ஆண்டு ஒன்றுக்கு 64 ஆயிரத்து 65 ரூபாய் வாடகையாக நிர்ணயக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தீ விபத்தில், இடிந்து விழுந்த கற்றூண்கள் அப்புறப்படுத்தும் பணிக்காக கோயில், உபயதாரர் நிதியில் இருந்து 30 லட்சம் ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story