பெரியார் நினைவு சமத்துவபுரத்தின் அழகிய காட்சிகள்!
விழுப்புரம் மாவட்டம் வானூர் தொகுதிக்குட்பட்ட கொழுவாரி பகுதியில், கடந்த 2010ஆம் ஆண்டு திமுக ஆட்சியில், பெரியார் நினைவு சமத்துவபுரம் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் வானூர் தொகுதிக்குட்பட்ட கொழுவாரி பகுதியில், கடந்த 2010ஆம் ஆண்டு திமுக ஆட்சியில், பெரியார் நினைவு சமத்துவபுரம் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. வீடுகள் கட்டும் பணி தொடங்கப்பட்ட நிலையில், ஆட்சி மாற்றம் காரணமாக அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில், மீண்டும் தி.மு.க ஆட்சி தொடங்கியதும், சமத்துவபுரம் திட்ட பணிகள் தொடங்கப்பட்டன. இதன்படி, கொழுவாரி சமத்துவபுரத்தில், 2 கோடியே 88 லட்சம் ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்ட வீடுகளை முதலமைச்சர் ஸ்டாலின் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். மேலும் சமத்துவபுரத்தின் நுழைவு வாயிலில் நிறுவப்பட்டுள்ள பெரியார் சிலையையும் முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
Next Story