சூடுபிடித்த மண் பானை விற்பனை : குழாய் பொருத்திய பானைக்கு வரவேற்பு!
கோடைக் காலத்தையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குழாய் பொருத்திய மண் பானை விற்பனை சூடுபிடித்துள்ளது.
கோடைக் காலத்தையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குழாய் பொருத்திய மண் பானை விற்பனை சூடுபிடித்துள்ளது. கோடை காலம் துவங்கியதும், மண்பானை மூலம் தண்ணீரை இயற்கையாக குளிர வைத்து பருகுவது வழக்கம். அந்த வகையில், தற்போது கோடைக்காலம் தொடங்கியதால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மண் பானை விற்பனை சூடுபிடித்துள்ளது. அதனுடன், ஜக்கு, குவளை போன்ற மண்பாண்ட பொருட்களும் விற்பனைக்கு வந்துள்ளன. குழாய் பொருத்திய மண் பாணை 50 முதல் 500 ரூபாய் வரையிலும், ஜக்கு, குவளை போன்றவை 200 ரூபாய் வரையிலும் விற்கப்படுகிறது. பிளாஸ்டிக் கேன்களுக்கு மாற்றாக விற்பனைக்கு வந்துள்ள குழாய் பொருத்திய மண் பானைகள் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளன.
Next Story