"மாணவர்களின் பாதுகாப்பில் சமரசம் கூடாது" ; "பழுதடைந்த பள்ளிகளை இடிக்க வேண்டும்" - ராமதாஸ்
தமிழகத்தில் பழுதடைந்த நிலையில் உள்ள பள்ளி கட்டடங்களை உடனடியாக இடிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழகத்தில் பழுதடைந்த நிலையில் உள்ள பள்ளி கட்டடங்களை உடனடியாக இடிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநிலம் முழுவதும் உள்ள 9 ஆயிரத்து 573 பள்ளிகளில் 13 ஆயிரத்து 36 கட்டடங்கள் பழுதாகி இருப்பதாக புள்ளிவிவரங்களை சுட்டிக்காட்டியுள்ளார். இதில் இன்னும் 6 ஆயிரத்து 33 பள்ளிகளில் உள்ள 8 ஆயிரத்து 228 கட்டங்கள் இடிக்கப்பட வேண்டும் என்றும் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்க இன்னும் 70 நாட்களே உள்ள நிலையில், மீதமுள்ள கட்டடங்களை இடித்து மாற்று வகுப்பறைகள் செய்து தருவது எந்த அளவுக்கு சாத்தியமாகும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பழுதடைந்த எந்த கட்டடத்திலும் வகுப்புகள் நடத்தப்படக்கூடாது என வலியுறுத்தியுள்ள ராமதாஸ், அவற்றை இடித்து விட்டு, நடப்பு நிதியாண்டிற்குள் புதிய கட்டடங்கள் கட்டித் தர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
Next Story