கணவரை கடத்தி விட்டு மனைவியை மிரட்டிய கும்பல் - சுற்றி வளைத்த போலீசார்!
பெருமாநல்லூரில் கணவரை கடத்தி சென்று மனைவியிடம் பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பெருமாநல்லூரில் கணவரை கடத்தி சென்று மனைவியிடம் பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டம், காளம்பாளையத்தை சேர்ந்த சந்தோஷ், பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றார். இவரை கடந்த 1ம் தேதி ஒரு கும்பல் கடத்திச் சென்றது. அவருடைய மனைவி மனினீமேகருக்கு செல்போனில் அழைத்து, கணவரை கடத்தியதாகவும், தங்களது வங்கி கணக்கில் 2 லட்சம் செலுத்தினால் விட்டு விடுவதாக கூறியுள்ளனர். அந்த வங்கி கணக்கில் 25 ஆயிரம் ரூபாயை மனினீமேகர் செலுத்தியுள்ளார். மீதமுள்ள பணத்தை செலுத்தாவிடில், கணவரை கொன்று விடுவதாக மிரட்டியதை அடுத்து, பெருமாநல்லூர் காவல்நிலையத்தில் மனினீமேகர் புகார் அளித்தார். செல்போன் எண்ணை ஆய்வு செய்ததில், தேனியில் உள்ள விடுதியில் இருப்பது தெரியவந்தது. அங்கு சென்ற போலீசார், காயங்களுடன் இருந்த சந்தோசை மீட்டு, கடத்தல் கும்பலை சேர்ந்த 7 பேரை கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.
Next Story