“வேகமாக பரவும் புதிய கோவிட் XE“ - WHO அதிர்ச்சி அறிக்கை

XE என்பது BA'1 மற்றும் BA.2 ஆகிய ஓமிக்ரான் விகாரங்களின் பிறழ்வான "மறுசீரமைப்பு" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
x
“வேகமாக பரவும் புதிய கோவிட் XE“ - WHO அதிர்ச்சி அறிக்கை ஒமிக்ரானை விட வேகமாக பரவக்கூடிய, புதிய கோவிட் மாறுபாடான XE இங்கிலாந்தில் கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

XE என்பது BA'1 மற்றும் BA.2 ஆகிய ஓமிக்ரான் விகாரங்களின் பிறழ்வான "மறுசீரமைப்பு" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருவர் கோவிட் நோயின் பல வகைகளால் பாதிக்கப்படும்போது XE மறுசீரமைப்பு பிறழ்வுகள் வெளிப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதிய பிறழ்வு XE ஆனது ஒமிக்ரானின் BA.2 துணை மாறுபாட்டை விட 10 சதவீதம் வேகமாக பரவக்கூடியது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக அளவில் 49 நபர்களுக்கு இது தொடர்பான அறிகுறிகள் இருப்பதாகவும், இங்கிலாந்தில் மொத்தமாக 637 பேருக்கு XE கண்டறியப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், புதிய மாறுபாடுகளால் தொற்றுக்குள்ளானவர்கள் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருவதாகவும், உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்