பிறை தெரிந்தது - நோன்பு தொடங்கியது... நாகூர் தர்ஹாவில் ரமலான் சிறப்புத் தொழுகை
புனித ரமலான் நோன்பு, உலக புகழ்பெற்ற நாகூர் தர்காவில் சிறப்பு தொழுகையுடன் துவங்கியது.
ரம்ஜானை முன்னிட்டு, பிறை பார்த்து அடுத்த 30 நாட்களுக்கு நோன்பு கடைபிடிக்கப்படுவது வழக்கம். ரமலான் பிறை தெரிந்ததால், இஸ்லாமியரின் 5 கடமைகளில் ஒன்றான நோன்பிருக்கும் நிகழ்வு, உலகப் புகழ்பெற்ற நாகூர் தர்காவில் தொடங்கப்பட்டது. திரளாக பங்கேற்ற இஸ்லாமியர், திராவியா எனும் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு நோன்பு தொடங்கினர். மாவட்டத்தின் 40க்கும் மேற்பட்ட பள்ளி வாசல்களில் ஏராளமான இஸ்லாமியர் தொழுகையுடன் நோன்பு தொடங்கினர்.
Next Story