பழங்குடியினர் அங்கீகாரம் வழங்க வேண்டும்" - திருப்பூர் எம்.பி. சுப்பராயன் கோரிக்கை

ஈரோடு மாவட்டத்தில் வசிக்கும் மலையாளி பழங்குடி சமூகத்திற்கு, பழங்குடியினர் அங்கீகாரம் வழங்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் திருப்பூர் எம்.பி. சுப்பராயன் கோரிக்கை விடுத்துள்ளார்.
பழங்குடியினர் அங்கீகாரம் வழங்க வேண்டும் - திருப்பூர் எம்.பி. சுப்பராயன் கோரிக்கை
x
ஈரோடு மாவட்டத்தில் வசிக்கும் மலையாளி பழங்குடி சமூகத்திற்கு, பழங்குடியினர் அங்கீகாரம் வழங்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் திருப்பூர் எம்.பி. சுப்பராயன் கோரிக்கை விடுத்துள்ளார். மக்களவையில் பழங்குடியினர் பட்டியல் திருத்த மசோதா மீதான விவாதத்தில் பேசிய சுப்பராயன், தமிழகத்தில் பழங்குடியினர் பட்டியலில், ஈரோடு மாவட்டத்தையும் இணைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் படுகர், நரிக்குறவர், குறும்பர் உள்ளிட்ட சமூகத்தினரையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என சுப்பராயன் எம்பி கோரிக்கை விடுத்தார்.


Next Story

மேலும் செய்திகள்