தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தம் எதிரொலி ! - பொதுப் போக்குவரத்தை நம்பியுள்ள மக்கள் திணறல்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 30 சதவிகிதம் அரசு பேருந்துகள் இயக்கப்படுவதால் வேலைக்கு செல்வோரும், மாணவ-மாணவிகளும் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
x
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 30 சதவிகிதம் அரசு பேருந்துகள் இயக்கப்படுவதால் வேலைக்கு செல்வோரும், மாணவ-மாணவிகளும் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் 90 பேருந்துகள் இயக்க வேண்டிய நிலையில் 11 அரசு பேருந்துகள் மட்டுமே பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதேபோல மயிலாடுதுறை, சீர்காழி, பொறையாறு அரசு போக்குவரத்து பணிமனையில் 155 பேருந்துகளில் 16 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றனர. தருமபுரி மாவட்டத்தில், பென்னாகரம், பாலக்கோடு, பொம்மிடி, அரூர் உள்ளிட்ட 6 பணிமனைகளில் 205 பேருந்துகளில் 29 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. இதனால், மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்