30% பேருந்துகள் மட்டுமே இயக்கம்... பேருந்து நிலையத்தில் அலைமோதிய கூட்டம்!
போக்குவரத்து தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் நெல்லை மாவட்டத்தில் 30 சதவீத அரசு பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன.
போக்குவரத்து தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் நெல்லை மாவட்டத்தில் 30 சதவீத அரசு பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. இதனால், தனியார் பேருந்துகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. கிராமப்புற பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படாததால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். முக்கியமாக, வெளியூர் செல்ல பேருந்து கிடைக்காமல், நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் மக்கள் தவித்து வருகின்றனர்.
Next Story