தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தம் எதிரொலி...நிரம்பி வழியும் மெட்ரோ, மின்சார ரயில்கள்
தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தத்தால் பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்படவில்லை.
தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தம் எதிரொலி...நிரம்பி வழியும் மெட்ரோ, மின்சார ரயில்கள் தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தத்தால் பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் மாநகர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சொற்ப அளவிலான பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதால், சென்னை மெட்ரோ மற்றும் மின்சார ரயில்களில் கூட்டம் கூட்டமாக மக்கள் தங்களது பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை கடற்கரை முதல் தாம்பரம், செங்கல்பட்டு மார்க்கம், கடற்கரை முதல் வேளச்சேரி வரையிலான மார்க்கம், சென்ட்ரல் முதல் திருவள்ளூர் வரையிலான ரயில் மார்க்கங்களிலும் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. அதே போல அரக்கோணம் - கும்மிடிப்பூண்டி வரையிலான ரயில் மார்க்கங்களிலும், விமான நிலையம் முதல் வண்ணாரப்பேட்டை வரையிலான மார்க்கங்களிலும் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது.
Next Story