"பைக்கில் வரும் மாணவர்களை பள்ளிக்குள் அனுமதிக்க கூடாது "
இருசக்கர வாகனத்தில் வரும் மாணவர்களை பள்ளிக்குள் அனுமதிக்க கூடாது என்று கடலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பூபதி உத்தரவிட்டுள்ளார்.
இருசக்கர வாகனத்தில் வரும் மாணவர்களை பள்ளிக்குள் அனுமதிக்க கூடாது என்று கடலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பூபதி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து பள்ளிகளுக்கு அவர் அனுப்பிய சுற்றறிக்கையில், பள்ளிகளில் மாலைநேரத்தில் வகுப்புகள் ஒரே நேரத்தில் முடிவதால், கூட்ட நெரிசலில் படிக்கட்டுகளில் மாணவர்கள் பயணம் செய்யும் நிலை ஏற்படுவதாக தெரிவித்துள்ளார். இதனை தவிர்ப்பதற்காக, 15 நிமிட இடைவெளியில் வகுப்பு நேரம் மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். மாணவர்கள் பள்ளிகளுக்கு இருசக்கர வாகனங்களில் வரும் போது அவர்களை பள்ளிக்குள் அனுமதிக்க கூடாது என்றும், பெற்றோர்களை வரவழைத்து வாகனத்தை ஒப்படைத்து அறிவுரைகள் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். குறைவான பேருந்து வசதிகள் உள்ள வழித்தடங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்குவதற்கு தொடர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், அந்த வழித்தடங்கள் குறித்த விபரங்களை மாவட்ட கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.
Next Story