"RRR படம் பாகுபலியை மிஞ்சிவிடும்"

ஆர்.ஆர்.ஆர் படம் எதிர்பார்த்ததை விட நன்றாக உள்ளதாக ரசிகர்கள் தெரிவித்தனர்.
x
வேலூர் மாவட்டம் குடியாத்த‌த்தில் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் வெளயான தியேட்டர்களின் அதிகாலையிலேயே ரசிகர்கள் குவிந்தனர். பெரும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் நாடுமுழுவதும் இன்று ரிலீஸ் ஆனது. பாகுபலிக்கு பிறகு ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர். மற்றும் ராம்சரண் நடிப்பில் இந்த படம் உருவாகியுள்ளது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று வெளியான ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் வேலூர் மாவட்டம் குடியத்தத்தில் 5 தியேட்டர்களில் திரையிடப்பட்டது. படத்தை பார்க்க உள்ளூர் மட்டுமல்லாமல், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் ரசிகர்கள் வந்திருந்தனர். மேலும், ரசிகர்களுக்காக தியேட்டர்களின் அதிகாலை சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டன. ஆர்.ஆர்.ஆர் படம் எதிர்பார்த்ததை விட நன்றாக உள்ளதாக ரசிகர்கள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்