“இலவச பேருந்தை, ஸ்டாலின் பேருந்து என பெண்கள் அழைக்கின்றனர்“ - உதயநிதி
மகளிருக்கான இலவச பேருந்தை, ஸ்டாலின் பேருந்து என பெண்கள் அழைப்பதாக திமுக இளைஞரணி செயலாளர் எம்.எல்.ஏ. உதயநிதி கூறியுள்ளார்.
மகளிருக்கான இலவச பேருந்தை, ஸ்டாலின் பேருந்து என பெண்கள் அழைப்பதாக திமுக இளைஞரணி செயலாளர் எம்.எல்.ஏ. உதயநிதி கூறியுள்ளார். முதல்வரின் 69 வது பிறந்த நாளில், ரத்ததானம் வழங்கிய ஆயிரத்து 70 பேருக்கு பரிசுக் கேடயம் வழங்கப்பட்டது. அதை வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற உதயநிதி எம்.எல்.ஏ, நம்பர் 1 அமைச்சர் சேகர்பாபு என பாராட்டினார். திமுக ஆட்சிக்கு வந்தால், இந்து விரோதமாக செயல்படுவர் என்பதை பொய்யாக்கி, அறநிலையத் துறையை, அருமையான துறையாக மாற்றியவர் சேகர்பாபு என்றும் புகழாரம் சூட்டினார். மேலும், திராவிட மாடல் ஆட்சி சிறப்பாக தொடர்வதாகவும் உதயநிதி பெருமிதம் தெரிவித்தார்.
Next Story