பி.எஃப். வட்டிக்குறைப்பு விவகாரம் - மத்திய அரசுக்கு ஓ.பி.எஸ். கோரிக்கை

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டிக்குறைப்பை மறுபரிசீலனை செய்ய மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
x
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டிக்குறைப்பை மறுபரிசீலனை செய்ய மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார். 

அவர் விடுத்துள்ள அறிக்கையில், அசாம் மாநிலத்தில் நடைபெற்ற அறங்காவலர் குழுக் கூட்டத்தில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8.5 விழுக்காட்டிலிருந்து 8.1 ஆக  குறைக்க முடிவு எடுத்துள்ளதாகவும், இதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளதாகவும்  தெரிவித்துள்ளார். 

கடந்த 2015-16ம் ஆண்டில் 8.8 விழுக்காடாக இருந்த  வருங்கால வைப்பு நிதியின் வட்டி விகிதம், தற்போது 8.1 விழுக்காடு என்ற நிலைக்கு வந்துள்ளதாக  அவர் குறிப்பிட்டுள்ளார். 

வட்டி குறைப்பு என்பது 40 ஆண்டுகளுக்கு முந்தைய வட்டி விகிதம் என்றும், அதாவது, 1977-78 ம் ஆண்டில், வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8 விழுக்காடாக  இருந்தாகவும்  அவர் தெரிவித்துள்ளார். 

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டிக்குறைப்பை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், இதற்கான அழுத்தத்தை திமுக அரசு கொடுக்க வேண்டும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்