நீட் விலக்கு மசோதா - முதல்வரிடம் ஆளுநர் கூறியது என்ன ?
நீட் விலக்கு கோரும் மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்க ஆளுநர் ஆர்.என்.ரவி உறுதி அளித்திருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை முதலமைச்சர் ஸ்டாலின் சந்தித்து பேசினார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இந்த சந்திப்பு சுமார் 30 நிமிடங்கள் நடைபெற்றது.
அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, மா.சுப்ரமணியன் உள்ளிட்டோரும் இந்த சந்திப்பில் பங்கேற்றனர். இந்த சந்திப்பு குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தங்களது கோரிக்கையை ஏற்று நீட் விலக்கு மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்க ஆளுநர் உறுதி அளித்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பல மாதங்களாக நிலுவையில் இருக்கும் சட்ட முன்வடிவுகள், கோப்புகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநரிடம் வலியுறுத்தியதாக முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
Next Story