விஜய் கார் இறக்குமதி வழக்கு - நீதிமன்றத்தில் பரபரப்பு வாதம்

இறக்குமதி காருக்கு தாமதமாக நுழைவு வரி விதித்தது தொடர்பாக நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.
x
இறக்குமதி காருக்கு தாமதமாக நுழைவு வரி விதித்தது குறித்த வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது. இதே கோரிக்கையுடன் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், அடையார் கேட் ஹோட்டல் சார்பிலும் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த மூன்று வழக்குகளும் நீதிபதி சுரேஷ்குமார் முன் இன்று விசாரணைக்கு வந்தன. அப்போது நடிகர் விஜய் தரப்பு வழக்கறிஞர், 400 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. நடிகர் விஜய் வழக்கில் பதிலளித்துள்ள வணிக வரித்துறை, 2021 செப்டம்பர் வரையிலான 189 மாதங்களுக்கு நுழைவு வரியில் 2 சதவீதம் அபராத வட்டியாக 30 லட்சத்து 23 ஆயிரத்து 609 ரூபாய் செலுத்தும்படி உத்தரவிட்டதாகவும், சட்டத்தில் அதற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, இந்த வழக்குகளின் தீர்ப்பை, நீதிபதி சுரேஷ்குமார், தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்