சொந்த செலவில் சிறுபாலம் - கவுன்சிலர் செயலுக்கு பொதுமக்கள் பாராட்டு

திருப்பூர் மாவட்டம் உடுமலையில், சொந்த செலவில் சிறுபாலம் அமைத்து கொடுத்த சுயேட்சை கவுன்சிலரின் நடவடிக்கைக்கு, பொதுமக்கள் மத்தியில் பாராட்டுகள் குவிகின்றன
x
திருப்பூர் மாவட்டம் உடுமலையில், சொந்த செலவில் சிறுபாலம் அமைத்து கொடுத்த சுயேட்சை கவுன்சிலரின் நடவடிக்கைக்கு, பொதுமக்கள் மத்தியில் பாராட்டுகள் குவிகின்றன. 27 வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு சுயேட்சையாக போட்டியிட்டு வென்றவர் ரீகன். பழனியம்மாள் லே அவுட் மற்றும் கோமதி நகர் பகுதிக்கு இடையே உள்ள கழிவுநீர் ஒடை சிதிலமடைந்து கடந்து செல்ல முடியாத நிலையில் இருந்தது. நீண்ட நாள் பிரச்னை என்பதால், நகராட்சி நடவடிக்கை வரை காத்திருக்காமல், பொதுமக்கள் உதவியுடன் கவுன்சிலர் ரீகன் இந்த செயலை செய்து முடித்தார்.

Next Story

மேலும் செய்திகள்