காவலர்களுக்கு வந்த புதிய QR அட்டனன்ஸ்!

காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபடுவதை உறுதிப்படுத்த QR ஸ்கேனிங் முறை மதுரையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
x
காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபடுவதை உறுதிப்படுத்த QR ஸ்கேனிங் முறை மதுரையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மதுரையில் சட்டமு ஒழுங்கை பாதுகாப்பதற்காக 25 காவல்நிலையங்களிலும் உள்ள போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ரோந்துக்கு செல்லும் போலீசார் அந்தந்த பகுதியில் உள்ள பட்டா புத்தகம் என்ற நோட்டில் கையெழுத்திட்டு வாரத்திற்கு ஒருமுறை உயரதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும். இதில் சில போலீசார் ரோந்து செல்வதற்கு முன்பாக பட்டா புத்தகத்தில் கையெழுத்திடுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, மாநகர காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா, புதிய முயற்சியாக ரோந்துக்கு செல்லும் போலீசாரின் பணியை உறுதிப்படுத்த QR கோடு பதிவு முறையை மொபைல் செயலியை அறிமுகம் செய்துள்ளார். இந்த QR கோடு ரோந்து பகுதிகளாக கருதும் 600 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது. ரோந்து பணிக்கு செல்லும் போலீசார் QR கோட்டை தனது தனது செல்போனில் உள்ள காவல்துறைக்கான செயலி மூலம் ஸ்கேன் செய்யும் போது, அவர் பணியில் உள்ளார் என்ற தகவல் உடனடியாக காவல் ஆணையர் அலுவலகத்திற்கு சென்றடைகிறது.

Next Story

மேலும் செய்திகள்