"என் மகளின் எதிர்காலத்தை ரஜினி பார்த்துக் கொள்வார்" - மறைந்த ரசிகரின் மனைவி

நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்ததாக, உயிரிழந்த ரஜினி ரசிகரின் மனைவி உருக்கத்துடன் தெரிவித்தார்.
x
நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்ததாக, உயிரிழந்த ரஜினி ரசிகரின் மனைவி உருக்கத்துடன் தெரிவித்தார். ரஜினியின் தீவிர ரசிகரான முத்துமணி, கடந்த மார்ச் 8 ஆம் தேதி மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். இந்நிலையில், இது குறித்து மதுரையில் பேசிய அவரது மனைவி லட்சுமி தங்களது குடும்பம் மிகப்பெரிய இழப்பை சந்தித்துள்ளதாக கூறினார். மேலும், தன்னுடைய மகளின் எதிர்காலத்தை ரஜினிகாந்த் பார்த்துக் கொள்வதாக தெரிவித்ததாகவும் அவர் அப்போது கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்