வருமான வரித்துறை அதிகாரி போல் வழிப்பறி - வெவ்வேறு இடங்களில் கைவரிசை
ஈரோட்டில் வருமான வரித்துறை அதிகாரி போல் நடித்து நகை, பணம் பறித்தவரை போலீசார் கைது செய்தனர்.
மொடக்குறிச்சி ஆலுத்தாம்பாளையம் அண்ணா வீதியை சேர்ந்த 66 வயது குழந்தைவேலு, திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலை சேர்ந்த 73 வயது சுப்பிரமணி ஆகியோரை, வெவ்வேறு இடங்களில் வழிமறித்து ஒருவர், வருமான வரித்துறை அதிகாரி என மிரட்டியுள்ளார். மேலும் அவர்களிடம் இருந்து, தலா 1 சவரன் மோதிரத்தை பறித்து தப்பியுள்ளார். எழுமாத்தூர் காட்டுவலசு பகுதியைச் சேர்ந்த கடலை வியாபாரி மணியிடமும், ஒரு லட்சம் ரூபாயை பறித்து சென்று விட்டார். இதுகுறித்து புகார்களின் பேரில், விசாரித்த போலீஸ், திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்த 55 வயது அப்துல் சலீம், நகை, பணத்தை வழிப்பறி செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து திருப்பூர் சென்ற போலீசார், அப்துல் சலீமை கைது செய்தனர். அவரிடம் இருந்து 1 சவரன் நகை, 75 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Next Story