"சாவுக்கு காரணம் ஆசிரியர்கள்" என கடிதம் எழுதிய மாணவன் - அதிர்ச்சி சம்பவம்

ஆசிரியர்தான் காரணம் என கடிதம் எழுதிவிட்டு, தற்கொலைக்கு முயன்ற மாணவன், சிகிச்சையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
x
சென்னை ராமாபுரத்தில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் படிக்கும் பத்தாம் வகுப்பு மாணவன், காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால், 3 மாதத்துக்கு பிறகு பள்ளி சென்றுள்ளார். அவர் 10 நிமிடம் தாமதமாக சென்றதாகவும், இதனால், அனைவரின் முன்பும் ஆசிரியர்கள் தரக்குறைவாக திட்டியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், பள்ளி ஆசிரியை சீதா, சாவுக்கு காரணம் எனக் கூறி கடிதம் எழுதி வைத்துவிட்டு, தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து அளித்த புகாரின் பேரில், ராமாபுரம் போலிசார், வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.



Next Story

மேலும் செய்திகள்