விசிகவுக்கு தொகுதி ஒதுக்கீடு : வெற்றி பெற்ற திமுக கவுன்சிலர் நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதி

விசிகவுக்கு தொகுதி ஒதுக்கீடு : வெற்றி பெற்ற திமுக கவுன்சிலர் நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதி
x
தேனி மாவட்டம் பெரியகுளம் நகர்மன்ற துணைத் தலைவர் பதவி, திமுகவின் கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.

ஆனால், மறைமுகத் தேர்தலில் 26 வது வார்டில் வெற்றி பெற்ற திமுக கவுன்சிலர் ராஜா முகமது போட்டியின்றி ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தலைமையின் உத்தரவை மீறி கூட்டணிக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் வெற்றி பெற்ற திமுகவினர் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

இதனிடையே, பதவியை ராஜினாமா செய்யாத ராஜா முகமது, நெஞ்சுவலி காரணமாக தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ராஜா முகமது, விசிக தோல்வியை சந்தித்ததால் துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்