"மே 13 ஆம் தேதி வரை பள்ளிகள் செயல்படும்" - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மே 13 ஆம் தேதி வரை பள்ளிகள் செயல்படும்
x
1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மே 13 ஆம் தேதி வரை பள்ளிகள் செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் மெட்ரிகுலேசன் பள்ளிகளில் உள்ள 1 முதல் 9 வரையிலான வகுப்புகளுக்கு மே13 ந் தேதி வரையில் பள்ளி வேலை நாட்கள் எனவும் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 2 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை செய்முறைத் தேர்வுகள் நடைபெறுவதோடு 6 முதல் 9 ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மே 5 ந் தேதி முதல் 13 ஆம் தேதி வரை தேர்வுகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கான முடிவுகள் மே 30 ஆம் தேதி வெளியிடப்பட்டு அடுத்த கல்வியாண்டில் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 24 ஆம் தேதி மற்ற வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 13 ஆம் தேதியும் வகுப்புகள் தொடங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்