தமிழகத்தின் கொரோனா பாதிப்பு நிலவரம்

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு ஆயிரத்தி 300-க்கும் கீழ் குறைந்துள்ளது.
x
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு ஆயிரத்தி 300-க்கும் கீழ் குறைந்துள்ளது. 

தமிழகத்தில் புதிதாக ஆயிரத்து 252 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 41 ஆயிரத்து 783 ஆக உயர்ந்துள்ளது.   

கொரோனாவுக்கு மேலும் 6 பேர் உயிரிழந்ததை அடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 37 ஆயிரத்து 962 ஆக அதிகரித்துள்ளது.    

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து மேலும், 4 ஆயிரத்து 768 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில், 23 ஆயிரத்து 772 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 285 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை அடுத்து கோவையில் 214 பேருக்கும், செங்கல்பட்டில் 105 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 69 பேருக்கும், திருப்பூர் மாவட்டத்தில் 57 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்