"விரைவில் குடும்பத் தலைவிகளுக்கு 1000 ரூபாய்" - முதலமைச்சர் ஸ்டாலின்

அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகம் அனைத்துத் துறைகளும் நிர்வாகச் சீர்கேட்டால் தத்தளித்தது என முதலமைச்சர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
x
அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகம் அனைத்துத் துறைகளும் நிர்வாகச் சீர்கேட்டால் தத்தளித்தது என முதலமைச்சர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். 

திருவள்ளூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், திருவள்ளூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு திட்ட பணிகளை பட்டியலிட்டார். மேலும், அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தபோதெல்லாம் தமிழ்நாடு அனைத்துத் துறைகளும் நிர்வாகச் சீர்கேட்டால் தத்தளித்தது என்றும் திமுக ஆட்சியில் தமிழகம் முன்னேறி வருகிறது என்றும் தெரிவித்தார். குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்கும் வாக்குறுதியை விரைவில் நிறைவேற்றுவோம் எனவும் முதலமைச்சர் உறுதி அளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்