பெண் வன காவலர் கொலை - சிறப்பு காவலர் சரண் - போடியில் பரபரப்பு

தேனி மாவட்டம் போடியில் வனத்துறை பெண் காவலர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
x
போடி தென்றல் நகர் தெற்கு தெருவில் வசித்து வருபவர் சரண்யா வயது 27
கணவர் பெயர் பொண்ணு பாண்டி. இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

இவர் தேனி சரக  வனத் துறையில் 2020 முதல் காவலராக பணியாற்றி வருகிறார். கணவர் நான்காண்டு களுக்கு முன்பு இறந்து விட்டார். 

இவரது சொந்த ஊர் மதுரை  போடி தென்றல் நகர் தெற்கு தெருவில் தனியாக வசித்து வருகிறார் இரு  குழந்தைகளும் மதுரையில் இருவருடைய அம்மாவுடன் வசித்து வருகின்றனர். 

முதல் கட்ட விசாரணையில் இறந்தவருடைய சொந்த ஊர் மதுரை என்றும் கொலை செய்தவர் மதுரை சிறப்பு காவல்  படையை சேர்ந்த திருமுருகன்  என்றும் தெரியவந்துள்ளது.

இவர் மதுரை  கீரைத்துறை  காவல் நிலையத்தில் சரணடைந்ததுள்ளார். கைரேகை தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரேத பரிசோதனைக்காக இறந்தவரின் உடல் கொண்டு செல்லப்பட்டுள்ளது. போடி நகர் காவல் துறையினர் மதுரையில் சரணடைந்த சிறப்புக் காவலர் திருமுருகனை அழைத்து வர விரைந்துள்ளனர்.

கள்ளத் தொடர்பால் பெண் வணக்காவலரை சிறப்புக் காவலர் கொலை செய்த சம்பவம்  போடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்