முதுகலை ஆசிரியர் போட்டி தேர்வு - "பெல்ட், நகைகள், ஹீல்ஸ் அணிய தடை"
முதுகலை ஆசிரியர் போட்டி தேர்வுக்கான விதிமுறைகளை, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
முதுகலை ஆசிரியர் போட்டி தேர்வுக்கான விதிமுறைகளை, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. 2 ஆயிரத்து 450 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டி தேர்வு இன்று தொடங்கி, 20ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 190 மையங்களில் நடைபெறும் தேர்வுகளில், இரண்டரை லட்சம் தேர்வர்கள் பங்கேற்கின்றனர். ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட பாடவாரியாக நடைபெறும் தேர்வில், தினமும் 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் தேர்வர்கள் வரை பங்கேற்கின்றனர். இந்நிலையில், தேர்வர்களுக்கான விதிமுறைகளை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதன்படி, தேர்வர்கள் பெல்ட், நகைகள், கைக்கடிகாரம், ஹீல்ஸ் காலணி ஆகியன அணிவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிந்த பிறகு தேர்வு அறையில் இருந்து, எந்த காகிதத்தையும் வெளியே கொண்டு வரக்கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Story