முடி திருத்தும் கடைகளில் குறிப்பிட்ட சமூகத்தை அனுமதிக்கவில்லை என புகார்

புதுக்கோட்டையில் உள்ள முடி திருத்தும் கடைகளில் குறிப்பிட்ட சமூகத்தை மட்டும் அனுமதிப்பதில்லை என்ற புகாரில், நீதிமன்ற உத்தரவின்படி வருவாய் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டார்.
x
புதுக்கோட்டையில் உள்ள முடி திருத்தும் கடைகளில் குறிப்பிட்ட சமூகத்தை மட்டும் அனுமதிப்பதில்லை என்ற புகாரில், நீதிமன்ற உத்தரவின்படி வருவாய் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டார். 

புதுப்பட்டி கிராமத்தில் உள்ள 3 முடி திருத்தும் கடைகளில் குறிப்பிட்ட சமூகத்தை மட்டும் அனுமதில்லை என்று உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இதில், மனுதாரரின் புகார் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனடிப்படையில், கிராமத்திற்கு சென்ற வருவாய் கோட்டாட்சியர் அபிநயா, முடி திருத்தும் கடைகளின் உரிமையாளர்கள் மற்றும் ஊர் பெரியவர்களிடம் விசாரணை மேற்கொண்டார். அதன்பின்னர் பேசிய அவர், கிராம மக்கள் ஒற்றுமையாக இருப்பதாகவும், ஊருக்கு சம்பந்தமில்லாத நபர் புகார் அளித்து ஒற்றுமையை குலைப்பதாக பொதுமக்கள் தெரிவித்ததாகவும் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்