விவசாயிடம் 4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய VAO கைது
நீலகிரி மாவட்டம் குந்தாவில் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டம் குந்தாவில் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கரியமலை கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சுந்தர்ராஜ். இவர், தனது நிலம் தொடர்பான சிட்டாவில் பெயர் சேர்க்க கோரி விண்ணப்பித்துள்ளார். ஆனால், விஏஓ லதா 4 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இதுதொடர்பாக, சுந்தர்ராஜ் லஞ்ச ஒழிப்புதுறையில் புகார்கள் அளிக்க, ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்துள்ளனர். இதைடுத்து, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், லஞ்ச பெறும் போது விஏஓ லதாவை கையும் களவுமாக கைது செய்தனர். மேலும், இடைத்தரகராக செயல்பட்ட கண்ணன் என்பவரையும் கைது செய்துள்ளனர்.
Next Story