பெட்ரோல் குண்டு வீச்சு: பாஜக அலுவலகத்தில் கூடுதல் பாதுகாப்பு

பெட்ரோல் குண்டு வீசப்பட்டதன் எதிரொலியாக பாஜக தலைமை அலுவலகத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
x
பெட்ரோல் குண்டு வீசப்பட்டதன் எதிரொலியாக பாஜக தலைமை அலுவலகத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னை, தி.நகரில் பாஜக தலைமை அலுவலகமான கமலாலயம் செயல்பட்டு வருகிறது. நகர்ப்புற தேர்தலையொட்டி தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று நள்ளிரவு இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர் கமலாலயம் முன்பு பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தினார். இந்த சம்பவம் தொடர்பாக வினோத் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில், நீட் தேர்வுக்கு பாஜக ஆதரவு தெரிவித்ததால் பெட்ரோல் வெடிகுண்டு வீசியதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்நிலையில், பாதுகாப்பு கருதி பாஜக தலைமை அலுவலத்தில் 40க்கும் மேற்பட்ட காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்