"காசு கொடுங்க சொல்லாம இருக்கேன்" - லஞ்சம் வாங்கிய அதிகாரி : அதிர்ச்சி வீடியோ
நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் என்ற பெயரில், உணவகம் மற்றும் கடைகளில் லஞ்ச வேட்டை நடத்தியவர் கைது செய்யப்பட்டார்.
நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் என்ற பெயரில், உணவகம் மற்றும் கடைகளில் லஞ்ச வேட்டை நடத்தியவர் கைது செய்யப்பட்டார். மதுரையை சேர்ந்த பெருமாள் என்பவர் தமிழ் நேசம் நுகர்வோர் சங்கம் என்ற பெயரில் இயங்கி வந்துள்ளார். திருப்பரங்குன்றம், திருமங்கலம் சுற்றுப் பகுதி கடைகளுக்கும் சென்ற அவர், போதைப் பொருட்கள் விற்பதாக கிடைத்த தகவலின் பேரில் வந்துள்ளதாகவும், தான் உணவு அதிகாரி என்றும் கூறி மிரட்டியதாக கூறப்படுகிறது. டீ கடை உரிமையாளரிடம் மாதம் 5 ஆயிரம் ரூபாய் மாமூல் கேட்ட அவர், போதைப் பொருள் விற்கலாம் என கூறியதாக தெரிகிறது. ஆயிரம் லஞ்சமாக வாங்கிய வீடியோவை பார்த்த, திருமங்கலம் போலீசார், போலி பெருமாளை கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story