கோவை மாநகராட்சியின் முதல் பெண் மேயராக மகுடம் சூடப்போவது யார்?

கோவை மாநகராட்சியின் 6-வது மேயராகவும், முதல் பெண் மேயராகவும் மகுடம் சூடப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பு தேர்தல் களத்தில் சூடுபிடிக்க துவங்கியுள்ளது.
x
கோவை மாவட்டத்தில் கோவை மாநகராட்சி, பொள்ளாச்சி, வால்பாறை, மேட்டுப்பாளையம், காரமடை, கூடலூர், மதுக்கரை, கருமத்தம்பட்டி ஆகிய 7 நகராட்சிகள் மற்றும் 33 பேரூராட்சிகளில் மொத்தம் 811 கவுன்சிலர் பதவிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. கோவை மேயர் பதவி தற்போது பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக இடையே கடும் போட்டி நிலவுகிறது . திமுக சார்பில் அக்கட்சியின் சிங்காநல்லூர் முன்னாள் எம்.எல்.ஏ கார்த்திக்கின் மனைவி இலக்குமி இளஞ்செல்வி மற்றும் கோவை கிழக்கு மாவட்ட செயலாளர் சேனாதிபதியின் மகளான 22 வயது இளம் வேட்பாளர் நிவேதா ஆகியோரும் போட்டியிடுகின்றனர். அதிமுக சார்பில் ஷர்மிளா மற்றும் கிருபாளினி ஆகியோரும் மேயர் வேட்பாளராக களத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர். இரு கட்சி வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்