திருமணத்திற்காக வெட்டப்பட்ட வாழையில் பரிதவித்த குருவி குஞ்சு - பாசம் காட்டி பராமரிக்கும் குடும்பம்
திருச்சியில் திருமண நிகழ்விற்கு வெட்டி வரப்பட்ட வாழைமரத்தில் குடிகொண்டிருந்த குருவி குஞ்சை திருமண வீட்டார் பராமரித்து வருகின்றனர்.
மணப்பாறை பாத்திமா மலை பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருமண நிகழ்விற்காக வாழைமரம் வெட்டி வரப்பட்டு பந்தல் முன்பு கட்டி வைத்துள்ளனர்.
இதனிடையே அந்த வாழைமரத்தில் குருவிக் குஞ்சு ஒன்று தலைகாட்டியுள்ளது. இதனை கண்ட திருமண வீட்டார் அதனை கவனித்த போது, அந்த மரத்தில் குருவி கூடு கட்டி வசித்து வந்தது தெரியவந்தது.
இதனிடையே அந்த குருவி குஞ்சை தற்போது, தனிஸ் ஸ்டெல்லாமேரி தனது வீட்டில் வைத்து உணவு ஊட்டி பராமரித்து வருகின்றார். இந்த நிகழ்வு அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Next Story