வேலூர் கோட்டையை பிடிக்கப்போவது யார்? - மக்களின் கோரிக்கைகள் என்னென்ன ?

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை எதிர்க்கொள்ளும் வேலூர் மாநகராட்சி மக்களின் எதிர்பார்ப்புக்கள் என்ன? அரசியல் கட்சிகளின் நிலை என்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.
x
சிப்பாய் புரட்சி நடைபெற்ற பிரமாண்ட வேலூர் கோட்டை, நூற்றாண்டுகள் புகழ்பெற்ற சி.எம்.சி. மருத்துவமனை என தனிப்பெரும் அடையாளங்களைக் கொண்டது வேலூர். 

நகராட்சியாக இருந்த வேலூர் கடந்த 2008 ஆம் ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.  4 மண்டலங்களை கொண்ட மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில், 4 லட்சத்து 14 ஆயிரத்து 255 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 

அவர்களுடைய எதிர்பார்ப்பு எல்லாம் சாலை, குடிநீர், தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்பதாகத்தான் இருக்கிறது.

அதில் நகரின் மையப்பகுதியில் இருக்கும் பெண்ட்லேண்ட் மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் என்பது முக்கிய கோரிக்கை. 

சாலைகளை விரிவாக்கம் செய்ய வேண்டும் எனவும் சாலையில் மாடுகள் திரிவதை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கிறார்கள் வேலூர் வாசிகள். 

பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும் என்பதும் இவர்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பு.

வேலூரில் கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் மாநகராட்சி தேர்தலில் மேயர் பதவியை அதிமுக கைப்பற்றியது. கடந்த முறை பட்டியலினப் பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட மேயர் பதவி, இந்த முறை பொதுப்பிரிவு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 

தி.மு.க பொதுச்செயலாளர் துரை முருகனின் சொந்த மாவட்டமான வேலூரில், 60 வார்டுகளும் ஆளும் கட்சியான திமுக வசமுள்ள வேலூர், காட்பாடி, அணைக்கட்டு ஆகிய 3 சட்டப்பேரவை தொகுதிகளிலே உள்ளன. இதனால் திமுக கூடுதல் உத்வேகத்துடன் மாநகராட்சியை பிடிக்க ஆர்வம் காட்டும் நிலையில், அதிமுகவும் 2011 ஆம் ஆண்டு பெற்ற வெற்றியை தக்க வைக்க முனைப்பு காட்டுகிறது.

தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகனின் சொந்த மாவட்டமான வேலூரில், 60 வார்டுகளும் ஆளும் கட்சியான திமுக வசமுள்ள வேலூர், காட்பாடி, அணைக்கட்டு ஆகிய 3 சட்டப்பேரவை தொகுதிகளிலே உள்ளன. 

இதனால் திமுக கூடுதல் உத்வேகத்துடன் மாநகராட்சியை பிடிக்க ஆர்வம் காட்டும் நிலையில், அதிமுகவும் 2011 ஆம் ஆண்டு பெற்ற வெற்றியை தக்க வைக்க முனைப்பு காட்டுகிறது.






Next Story

மேலும் செய்திகள்