மருத்துவராகும் அரசு பள்ளி மாணவர்கள்.. ஸ்டெதஸ்கோப் வழங்கிய ஆட்சியர் - நெகிழ்ச்சி சம்பவம்

நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவம் படிப்பதற்கு தேர்வான 9 அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஸ்டெதஸ்கோப், மருத்துவ சீருடை உள்ளிட்டவற்றை வழங்கி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி பாராட்டு தெரிவித்தார்.
x
நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவம் படிப்பதற்கு தேர்வான 9 அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஸ்டெதஸ்கோப், மருத்துவ சீருடை உள்ளிட்டவற்றை வழங்கி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி பாராட்டு தெரிவித்தார்.7 புள்ளி 5 சதவிகித இட ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ படிப்பில் சேர திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த 9 அரசு பள்ளி மாணவ, மாணவிகள் தேர்வு பெற்றனர். இதனையடுத்து மாணவர்களை பாராட்டும் விதமாக  ரோட்டரி சங்கம் சார்பாக பாராட்டு விழா நடைபெற்றது. இதில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்திரி கலந்து கொண்டு மாணவ மாணவிகளை பாராட்டி ஸ்டெதஸ்கோப் மற்றும் மருத்துவ சீருடை வழங்கி உற்சாகப்படுத்தினார். 

Next Story

மேலும் செய்திகள்