தற்கொலைக்கு முயன்ற அக்கா.. ஜூஸ் என நினைத்து விஷத்தை குடித்த தங்கை
13 வயதில் நடந்த கட்டாய திருமணத்தின்படி, குடும்பம் நடத்த அழைத்ததால், தப்பிவந்த சிறுமி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தற்கொலை முயன்ற அக்கா.. ஜூஸ் என நினைத்து விஷத்தை குடித்த தங்கை
கட்டாய கல்யாணத்தால் நேர்ந்த விபரீதம்
13 வயதில் நடந்த கட்டாய திருமணத்தின்படி, குடும்பம் நடத்த அழைத்ததால், தப்பிவந்த சிறுமி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசலை சேர்ந்த சிறுமிக்கு, 4 ஆண்டுகளுக்கு முன் விழுப்புரம் மாவட்டம் ஆண்டிகுப்பம் சிவகுமாருடன் திருமணம் நடந்துள்ளது. அப்போது, திருமணம் பிடிக்காமல், தந்தை வீட்டுக்கு தப்பிவந்து சித்தப்பாவிடம் சிறுமி தஞ்சமடைந்தார். அவரை, தனது மகளுடன் சேர்த்து குருகுலப் பள்ளி ஒன்றில், சித்தப்பா படிக்க வைத்துள்ளார். சிறுமி தற்போது 11ஆம் வகுப்பு படிக்கும் நிலையில், திருமணம் செய்த சிவகுமார், தன்னுடன் குடும்பம் நடத்த அழைப்பு விடுத்துள்ளார். இதையறிந்த சிறுமி, குளிர்பானத்தில் விஷம்கலந்து குடித்துள்ளார். சித்தப்பா மகளும், குளிர்பானத்தை அருந்தியுள்ளார். இதையறிந்த பெற்றோர், அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதனிடையே, சிறுமியிடம் வாக்குமூலம் பெற்ற திருவாரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், சிவக்குமார் மீது போக்சோ உள்ளிட்ட இருபிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். திருமணத்துக்கு உடந்தையாக இருந்த சிவகுமாரின் பெற்றோர் உள்ளிட்ட 5 பேர் மீது குழந்தை திருமண தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story