புதுமனை புகுவிழாவில் புகுந்து அடிதடி - குடும்பத்துடன் வந்து கணவனை தாக்கிய மனைவி
ஒசூர் அருகே கிரகபிரவேச நிகழ்ச்சியில், உறவினர்கள் தகராறில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஒசூர் அருகே அந்தேவனப்பள்ளி கிராமத்தில் சித்தராஜ் என்பவர் புதிய வீடு கட்டி கிரகபிரவேசம் நடத்தினார்.
அவரை பிரிந்து வாழும் மனைவி ஷில்பா மற்றும் உறவினர்கள் கிரகபிரவேச நிகழ்ச்சிக்கு வந்து தகராறில் ஈடுபட்டனர். ஒருவருக்கொருவர் தாக்கி
கொண்டதில் பலர் படுகாயமடைந்தனர்.
வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள், பாத்திரங்கள் உள்ளிட்டவை அடித்து நொறுக்கப்பட்டன. காயமடைந்தவர்கள் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இந்த மோதல் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story