"நீட் மசோதாவை மீண்டும் அனுப்புவதால் என்ன சாதிக்க போகிறீர்கள்?" - அண்ணாமலை கேள்வி
நீட் சட்ட முன்வடிவை மீண்டும் அனுப்புவதால் என்ன சாதிக்க நினைக்கிறீர்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்ட ஒரு சட்ட முன்வடிவை மீண்டும் அனுப்புவதால் என்ன சாதிக்க நினைக்கிறீர்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பிஅனுப்பிய நிலையில் அனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருப்பதற்கு நன்றி என கூறியுள்ளார். தமிழக அரசுக்கு,மக்கள் நலனுக்காக முழு ஒத்துழைப்பு கொடுக்க பாஜக தயாராக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
குடியரசுத்தலைவரால் நிராகரிக்கப்பட்ட நீட் விலக்கு மசோதா, மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கும் முயற்சி தேவை தானா என வினவியுள்ளார்.
இதன் மூலம் அரசியல் செய்யலாம் என்ற தப்பு கணக்கில் உள்ளீர்களா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மாணவர்களின் வாழ்க்கையோடும், அவர்கள் உயிரோடும் விளையாடி அரசியல் செய்ய நினைக்க வேண்டாம் என்றும், அதை பாஜக அனுமதிக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Next Story