ஆர்.டி.ஓ. வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை -முக்கிய ஆவணங்கள் பறிமுதல்
தஞ்சாவூரில் உள்ள புதுக்கோட்டை வட்டார போக்குவரத்து அலுவலர் வீட்டில் 13 மணி நேரம் நடந்த சோதனையில் 5 லட்சம் ரொக்கம், 100 பவுன் தங்க நகையை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.
தஞ்சை மருத்துவ கல்லூரி சாலையில் உள்ள, புதுக்கோட்டை வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெய்சங்கர் வீடு மற்றும் பெட்ரோல் பங்கில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று பிற்பகல் 3 மணி அளவில் சோதனை செய்தனர்.
அதிகாலை 4 மணி வரை நடைபெற்ற இந்த சோதனையில் அவரது வீட்டில் இருந்து கணக்கில் வராத 5 லட்சம் ரொக்கம், 5 வாகனங்களுக்குரிய ஆவணங்கள், வீடு, பெட்ரோல் பங்கிற்க்கான ஆவணங்கள் பறிமுதல். மேலும் 100 பவுன் தங்க நகை இருப்பதும் கண்டறியப்பட்டதாக தகவல்.
Next Story