ஜெயலலிதா சிலையை பராமரிக்கும் நிர்வாக பொறுப்பு மாற்றம்
உயர்கல்வி மன்ற வளாகத்தில் உள்ள ஜெயலலிதாவின் சிலையை பராமரிக்கும் நிர்வாக பொறுப்பை, செய்தி மக்கள் தொடர்புத்துறைக்கு மாற்றி, அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர்கல்வி மன்ற வளாகத்தில் உள்ள ஜெயலலிதாவின் சிலையை பராமரிக்கும் நிர்வாக பொறுப்பை, செய்தி மக்கள் தொடர்புத்துறைக்கு மாற்றி, அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உயர்கல்வி மன்ற வளாகத்தில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவில் சிலையை, உயர்கல்வி துறை பராமரித்து வந்தது. இந்நிலையில், சிலையை பராமரிக்கும் பொறுப்பு, செய்தி மக்கள் தொடர்புத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பில், ஆண்டுதோறும் மற்ற தலைவர்களின் சிலைகளுக்கு, அவர்கள் பிறந்த தினத்தன்று அரசு சார்பில் மரியாதை செய்வதை போல, ஜெயலலிதா சிலைக்கும் மரியாதை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story