பாரதியாருக்கு இணையான தேசபக்தி கவிஞர் அர்த்தநாரீச வர்மா

இந்திய விடுதலையின் 75 வது ஆண்டை கொண்டாடும் விதமாக, இன்று ஒரு சுதந்திரப் போராட்ட வீரரைப் பற்றி தெரிந்து கொள்வோம்..
x
வெள்ளையரின் அடக்குமுறை உச்சத்தில் இருந்தபோது, அஞ்சாது தேசபக்தி கவிதை, கட்டுரைகளை பத்திரிகைகளில் பிரசுரித்தவர் தியாகி அர்த்தநாரீச வர்மா. 1874-ல் சேலத்தில் பிறந்தவர். திரு. வி. கல்யாண சுந்தரனாரால் 'மகாகவி பாரதியாருக்கு இணையான தேசபக்தி கவிஞர்' என புகழப்பட்டவர். கதராடை அணிவதை கொள்கையாக கொண்ட அவர், காந்தியடிகள் 1934-ல் திருவண்ணாமலை வந்த போது வரவேற்புரையாற்றினார். சுதந்திரப் போராளி, கவிஞர் என நாட்டுக்காக உழைத்த மாபெரும் தியாகி அர்த்தநாரீச வர்மா 1964-ல் திருவண்ணாமலையில் மறைந்தார்.


Next Story

மேலும் செய்திகள்