வேட்பு மனுத் தாக்கல் செய்ய வந்த நரிக்குறவர் இனப்பெண்

நரிக்குறவர் மக்களுக்கு பட்டா மற்றும் அடையாள அட்டை வழங்கிய முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் வாசகங்களுடன் ஆவடியில் நரிக்குறவர் இனப் பெண் ஒருவர் வேட்புமனுத் தாக்கல் செய்ய வந்தது அனைவரையும் கவர்ந்தது.
x
ஆவடி மாநகராட்சி 26வது வார்டு உறுப்பினர் பதவிக்கு திருமுல்லைவாயில் ஜெயா நகர் நரிக்குறவ காலனியை சேர்ந்த தனலட்சுமி என்ற பெண் வேட்புமனுத் தாக்கல் செய்ய வந்திருந்தார். இவருக்கு ஆதரவாக 50க்கும் மேற்பட்ட நரிக்குறவர் மக்கள் முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் வாசகங்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்த நடிகர் சூர்யாவுக்கு நன்றி தெரிவிக்கும் வாசகங்களுடன் வருகை தந்தனர். இவர்களுக்கு புதிய ராணுவ சாலையில் மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆவடி மாநகராட்சியில் முதல்முறையாக வேட்புமனு தாக்கல் செய்ய நரிக்குறவ பெண் ஒருவர் வந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.


Next Story

மேலும் செய்திகள்