பிரபல உணவு நிறுவன கிடங்கில் ரசாயனம் பூசப்பட்ட அப்பளங்கள் பறிமுதல் - அதிகாரிகள் அதிரடி

சென்னையில் கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரசாயண வர்ணம் பூசப்பட்ட அப்பளங்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
x
சென்னை, சௌகார்பேட்டை பகுதியில் இயங்கி வந்த பிரபல நிறுவனத்தின் அப்பள கிடங்கில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். கிடங்கில் வைக்கப்பட்டிருந்த உணவுப் பொருட்களின் காலாவதி தேதி, அவற்றின் தரம் உள்ளிட்டவை குறித்து அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அதில், உடலுக்கு அதிக கேடு விளைவிக்கும் ரசாயண வர்ணம் பூசப்பட்ட அப்பளங்கள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, அங்கிருந்து சுமார் நான்கரை டன் எடை அளவிலான அப்பளங்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவற்றை ஆய்வுக்காக பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர்.  


Next Story

மேலும் செய்திகள்