சுய வேலை வாய்ப்பை ஏற்படுத்துங்கள்- நீதிமன்றம்

போலி வேலைவாய்ப்பு நிறுவனங்களிடம் ஏமாற்றம் அடைவதை தடுக்க, இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்பை உருவாக்கி கொடுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேட்டுகொண்டுள்ளது.
சுய வேலை வாய்ப்பை ஏற்படுத்துங்கள்- நீதிமன்றம்
x
தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளர் பணிக்கு நேர்முக தேர்வில் கலந்து கொள்ளும் படி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதனுக்கு அழைப்பு கடிதம் அனுப்பபட்டது. இது தொடர்பாக, தாமாக முன் வந்து சென்னை  உயர்நீதிமன்றம் வழக்கை விசாரணைக்கு எடுத்து கொண்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், கிருபாகரன் மற்றும் வைத்தியநாதன் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், சிபிசிஐடி சைபர் கிரைம் குற்றப்பிரிவு நடத்திய விசாரணையில், 

 வேலை வாங்கி தருவதாக சித்ரா என்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கொரோனா ஊரடங்கு பாதிப்பை சாதகமாக பயன்படுத்தி சமீபகாலமாக, போலி வேலை வாய்ப்பு நிறுவனங்கள் இளைஞர்களை மோசடி செய்துள்ளதாகவும், ஏமாற்றம் அடைந்த இளைஞர்கள் பலர் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளதாகவும் நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

மேலும் வேலை வாங்கி தருவதாக கூறி நடைபெறும் மோசடி மற்றும் வேலைவாய்ப்பின்மை பிரச்சனையை சமாளிக்க, மத்திய - மாநில அரசுகள், இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்று யோசனை தெரிவித்து, இந்த வழக்கை முடித்து வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்