கட்டுக்கட்டாக சிக்கிய பணம் - அதிகாரி வீட்டில் அதிரடி ரெய்டு
நில அளவையாளர் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நில அளவையாளர் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆம்பூர் தாலுகா அலுவலகத்தில் நில அளவையாளராக பணியாற்றி வரும் பாலாஜி என்பவர், பட்டா மாற்றம் செய்ய எட்டாயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக, போலீசார் கைது செய்தனர். சேண்பாக்கம் பகுதியில் உள்ள பாலாஜியின் வீட்டில், வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று திடீரென சோதனை மேற்கொண்டனர். அப்போது, வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 20 லட்சம் ரூபாய் சிக்கியதாக அதிகாரிகள் கூறினர். நேற்று இரவு 12 மணியை கடந்தும் நடைபெற்ற சோதனையில், பல்வேறு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. நில அளவையாளர் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story