வங்கிக் கணக்கில் இருந்து நூதன முறையில் திருட்டு | #ThanthiTv

வங்கிக் கணக்கில் இருந்து நூதன முறையில் திருட்டு
x
உடையாப்பட்டி பைபாஸ் பகுதியில் வசித்து வரும் தனியார் பள்ளி முதல்வர் மாரியப்பன் என்பவர், அங்குள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளையில் கணக்கு வைத்துள்ளார். இவரை தொடர்பு கொண்ட அடையாளம் தெரியாத நபர்கள், வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாகவும், செல்போனுக்கு வரும் கடவு எண்ணை தெரிவித்தால் சரி செய்யப்படும் எனவும் கூறியதாக தெரிகிறது. பின்னர் கடவு எண்ணை தெரிவித்த நிலையில், வங்கிக் கணக்கில் இருந்து 68 ஆயிரம் ரூபாய் பணம் எடுக்கப்பட்டுள்ளதாக குறுஞ்செய்தி வந்ததை கண்டு மாரியப்பன் அதிர்ச்சியடைந்தார். இது குறித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட சைபர் கிரைம் போலீசார், வங்கிக் கணக்கில் இருந்து எடுத்த பணத்தில் பொருட்கள் வாங்க ஆர்டர் செய்ததை கண்டறிந்தனர். பின்னர் குறிப்பிட்ட ஆன்லைன் நிறுவனத்தை தொடர்பு கொண்ட போலீசார், இது பற்றிய விவரங்களை தெரியப்படுத்தினர். இதையடுத்து, ஆர்டர் செய்ததற்கான பணத்தை மாரியப்பனின் வங்கிக் கணக்குக்கு ஆன்லைன் நிறுவனம் திருப்பி அனுப்பியது.

Next Story

மேலும் செய்திகள்