"உண்மை விபரங்களை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்"

கொரோனா மற்றும் ஒமிக்ரான் நோய் தொற்று பாதிப்பின் உண்மை விபரங்களை மக்களிடம் எடுத்து கூற வேண்டும் என்று அரசுக்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
x
கொரோனா மற்றும் ஒமிக்ரான் நோய் தொற்று பாதிப்பின் உண்மை விபரங்களை மக்களிடம் எடுத்து கூற வேண்டும் என்று அரசுக்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஒமிக்ரான் பரிசோதனை மையங்கலை ஏற்படுத்த வேண்டும் என்றும், எந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளோம் என்பதை மக்களுக்கு தெரிவிக்க வேண்டியது அரசின் கடமை என்றும் தெரிவித்துள்ளார். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் பொறுப்புடன் நடந்துக் கொள்ள வேண்டும் என்றும், மக்களை அச்சுறுத்தக்கூடாது என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். கொரோனா நோய் தொற்றை கட்டுக்குள் வைக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் தமிழக அரசுக்கு உண்டு என்றும் தெரிவித்துள்ளார். 



Next Story

மேலும் செய்திகள்