பொங்கல் பண்டிகையால் பூக்களின் விலை உயர்வு..மல்லிகை கிலோ ரூ.3,500க்கு விற்பனை

பொங்கல் பண்டிகையை ஒட்டி தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை உயர்ந்த நிலையில் மல்லிகை கிலோ மூவாயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனையானது.
x
பொங்கல் பண்டிகையை ஒட்டி தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை உயர்ந்த நிலையில் மல்லிகை கிலோ மூவாயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனையானது.கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் உள்ள மலர் சந்தையில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. நேற்று முன் தினம் கிலோ ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனையான மல்லிகை இன்று மூவாயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.  பிச்சிப்பூ 800 ரூபாயில் இருந்து 2500 ரூபாய்க்கும், ரோஜா 120 ரூபாயில் இருந்து 200 ரூபாய்க்கும், அரளி 100 ரூபாயில் இருந்து 300 ரூபாய்க்கும் விலை உயர்ந்து விற்பனையாகிறது. இதேபோன்று கேந்தி 60 ரூபாயில் இருந்து 90 ரூபாய்க்கும், வெள்ளை சிவந்தி 80 ரூபாயில் இருந்து 160 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மரிக்கொழுந்து 120 ரூபாயாகவும், துளசி 40 ரூபாயாகவும், வாடாமல்லி 70 ரூபாயாகவும், தாமரை ஒன்றின் விலை 10 ரூபாயாகவும் உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்